மயான துப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் நகராட்சி மன்றத்தினரால் ஊறணி இந்துமாயனத்தில் துப்புரவாக்கல் செயற்திட்டம் நடைபெற்றது
Author: webadmin
மயான துப்புரவாக்கல் செயற்திட்டம் ஊறணி சிறுவர் இடுகாடு
மயான துப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் நகராட்சி மன்றத்தினரால் ஊறணி சிறுவர் இடுகாடு துப்புரவாக்கல் செயற்திட்டம் நடைபெற்றது.
வட்டாரரீதியாக நடாத்தப்பட்ட நடமாடும் சோலை வரி அறவீட்டு சேவை
ஆதனங்களிற்கான சோலை வரியில் 10% கழிவை முன்னிட்டு வட்டாரம் தோறும் நகர சபையால் நடமாடும் சோலை வரி அறவீட்டு சேவை நடாத்தப்பட்டது.
வல்வெட்டித்துறை நகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு
வல்வெட்டித்துறை நகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு "வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை" எனும் தொனிப்பொருளில் இன்று தேசிய கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும் சத்தியப்பிரமாணம் செய்தல் போன்ற நிக ழ்வுகளுடன் இனிதே ஆரம்பமானது.
டெங்கு நோய் கட்டுப்படுத்தும் செயற்திட்டம்
டெங்குநோய் கட்டுப்படுத்தும் செயற்திட்டம் 01.01.2024 அன்று நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கோவில்கள் , தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகள்
நகராட்சி மன்ற உத்தியோத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தொற்றாநோய்களுக்கான மருத்துவ முகாம்
55 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான தொற்றாநோய்களிற்கான போசாக்குணவு தொடர்பான விழிப்புணர்வு
கணக்கறிக்கை தயாரித்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு முதலிடம்
வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களிற்கிடையே 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை ( Best Annual Reports and Accounts) தொடர்பாக நடாத்தப்பட்ட போட்டியில் வலவெட்டித்துறை நகரசபை தங்க விருதினை (Gold Award) பெற்றள்ளது.மேலும் Overall Gold Award ஐயும் பெற்றுள்ளது
தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்-2023
தேசிய வாசிப்பு மாதமானது உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது என்ற கருப்பொருளின் அடிப்படையில் நகரசபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிற்கிடையே சித்திரப்போட்டி , மனனப்போட்டி, கதைகூறல், கட்டுரை எழுதுதல், கவிதையாக்கம் என்பன நடாத்தப்பட்டது.
தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளூராட்சி மாதம் 2023
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளூராட்சி மாதம் என்பவற்றின் நிறைவு நாள் விழாவில் கடந்த வருடம் சிறப்பாக செயலாற்றி நகராட்சி மன்றத்திற்கு தனி அங்கீகாரத்தை பெற்றுத் தந்த உத்தியோகத்தர்களிற்கான மெய்ச்சுரை மற்றும் மேற்படி மாதங்களையொட்டிய போட்டிகளின் போது வெற்றியீட்டிய உத்தியோகத்தர்களிற்கான பரிசில்கள் வழங்கப்பட்ட போதான பதிவுகள் சில