நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் வல்வெட்டித்துறை நகரசபைக்கான Local Area Plan தயாரிக்கப்பட்டு பொது மக்களின்அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அபிப்பிராயங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரியினூடாகவோ அல்லது செயலாளர்,வல்வெட்டித்துறை நகரசபை , காங்கேசன்துறை வீதி , வல்வெட்டித்துறை எனும் முகவரிக்கு கடிதமூலமாகவோ தெரிவிக்கலாம். குறித்த அபிவிருத்தி திட்டத்தினை பார்வையிடுவதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
Local Area Plan – Valvettithurai UC – pdf

காலநிலை எச்சரிக்கை

காலநிலை தொடர்பான விரிவான அறிக்கைக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும். https://valvettithurai.uc.gov.lk/wp-content/uploads/2024/11/Preparedness-for-Adversed-Weather-Conditions.pdf?attachment_id=1932  

மயானதுப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (19.05.2024) ஊறணி இந்துமயானம் துப்புரவாக்கல் செய்யப்பட்டது.

மயானதுப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (19.05.2024) ஊறணி இந்துமயானம் துப்புரவாக்கல் செய்யப்பட்டது.
♻ வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் தலைமையிலான வல்வெட்டித்துறை நகரசபையினர் துப்புரவாக்கல் செயற்திட்டத்தினை மேற்கொண்டனர்

ஊறணி கடற்கரையோரம் மற்றும் ரேவடி கடற்கரையோரம் இன்றைய தினம் (19.05.2024) சுத்திகரிப்பு

ஊறணி கடற்கரையோரம் மற்றும் ரேவடி கடற்கரையோரம் இன்றைய தினம் (19.05.2024) சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
வல்வெட்டித்துறை நகர சபையினர், வல்வெட்டித்துறை பொலிஸார் மற்றும் கிராம மட்ட குழுக்கள் சகிதம் இன்று ஊறணி,ரேவடி கடற்கரையோரம் சுத்தம் செய்யப்பட்டது.
டெங்கு அற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நோக்குடன் கடற்கரையோர சுத்திகரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, இக்கடற்கரையோரங்கள் துப்பரவு செய்யப்பட்டது

கயிறுழுத்தல் போட்டியில் நகரசபை முதலிடம்

வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு உள்ளூராட்சி சபைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட உத்தியோகத்தர்களிற்கான (ஆண்கள்) கயிறிழுத்தல் இறுதிப் போட்டியில் வல்வெட்டித்துறை நகரசபை உத்தியோகத்தர்கள் (ஆண்கள்) அணி சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது . இப்போட்டி தரையில் அல்லாமல் விசேடமாகக் கடலுக்குள் வித்தியாசமான முறையில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
💦 பங்குபற்றிய உத்தியோகத்தர்களிற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
💦 பங்குபற்றிய உத்தியோகத்தர்களின் விபரம்
👉ஜெகநாதன் ஜெயசீலன்
👉 லோறன்ஸ் நிசாந்தன்
👉 லோறன்ஸ் றெஜிகரன்
👉 ஜெகநாதன் பிரகாஸ்
👉 சோமு தேவகுமார்
👉 ஆனந்தராசா யோயல்
👉 பூதன் ரவி
👉 தோமஸ் நிக்சன்
👉 கந்தையா பிரசாந்
👉 சுப்பிரமணியம் சுசாந்
👉 நம்பராஜா ராம்ராஜ்
👉 சுந்தரேஸ்வரன் மயூரன்
👉 சுப்பிரமணியம் சுமன்
👉 ஆனந்தராசா யோவேல்

மதிப்பிக்குரிய செயலாளர் தர்சினி நிதர்சன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு சபையில் நடைபெற்றது.

 

வடக்கு மாகாணமதில் - நம் வல்வெட்டித்துறை நகரசபை தனித்துவமாய் முத்திரை பதித்திட திறம்பட 02.03.2021 தொடக்கம் 2024.04.01 வரை சேவையாற்றி இன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றலாகிச் செல்லும் எங்கள் மதிப்பிக்குரிய செயலாளர் திருமதி தர்சினி நிதர்சன் அவர்களை கௌரவித்து பிரியாவிடை வழங்கிய நிகழ்வின் சில பதிவுகள்.

 

வடக்கு மாகாணமதில் - நம் வல்வெட்டித்துறை நகரசபை தனித்துவமாய் முத்திரை பதித்திட திறம்பட 02.03.2021 தொடக்கம் 2024.04.01 வரை சேவையாற்றி இன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றலாகிச் செல்லும் எங்கள் மதிப்பிக்குரிய செயலாளர் திருமதி தர்சினி நிதர்சன் அவர்களை கௌரவித்து பிரியாவிடை வழங்கிய நிகழ்வின் சில பதிவுகள்.

பிரிவுபசார விழாவுமஂ வருட இறுதி ஒனஂறுகூடலஂ 2023

 

ஊழியரஂ நலனஂபுரிசஂசஙஂகதஂதினஂ ஏறஂபாடஂடிலஂ நடாதஂதபஂபடஂட 2023 ஆணஂடிறஂகான பிரிவுபசார விழாவுமஂ வருட இறுதி ஒனஂறுகூடலஂ நிகழஂவினஂ பதிவுகளஂ சில

 

பூச்சிய கழிவு தின செயற்றிட்டம்

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட வல்வை றோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலை மாணவர்களிற்கு முறையான திண்மக் கழிவகற்றல் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்டது.
♻️இதன்போது முறையற்ற திண்மக்கழிவகற்றல் செயற்றிட்டத்தினால் ஏற்படும் சுகாதார விளைவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
♻️அத்துடன் வேறுபட்ட திண்மக்கழிவுகளுக்கான நிறக்குறியீடுகளை பயன்படுத்தி தரம்பிரித்து கழிவுகளை அகற்றுதலும் அதனுடன் தொடர்புடைய 3R (Reduce- குறைத்தல், Reuse - மறுபயன்பாடு, Recycle - மறுசுழற்சி) பொறிமுறையை அமுல்படுத்தலும் இதனுடைய பிரதான நோக்கம் ஆகும்.

 

முன்பள்ளிகளிற்கு வர்ணக்கழிவுக் கூடைகள் விநியோகம்

 

சிறுவர்களிடத்தே கழிவு முகாமைத்துவ எண்ணக்கருவை புகுத்து முகமாக நகராட்சி மன்ற நிர்வாக எல்லைக்குட்பட்ட முன்பள்ளிகளிற்கு சிறிய வர்ணக்கழிவுக் கூடைகள் வழங்கப்பட்டது.

♻️ சிறார்களின் மனங்களில் ஊன்றப்படும் சிறிய எண்ணக்கரு நாளைய வல்வையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் சபை நிதியில் இவை வழங்கப்பட்டன.

டிஜிட்டல் அறிவு மையம் (Digital knowledge Centre) உருவாக்கம்

டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுதல்’ என்ற கருப்பொருளில் ஆசிய மன்றத்தின் (Asia Foundation) நிதியுதவியுடன் ஆளுகைக்கான புத்தாக்க மையத்தால் (CGI) அமுலாக்கப்படும் ‘டிஜிட்டல் அறிவு மையங்களை வலுப்படுத்தும்’ செயற்திட்டத்தின் கீழ் வல்வெட்டித்துறை நகர சபை பொது நூலகத்தில் டிஜிட்டல் அறிவு மையம் (Digital knowledge Centre) நிறுவப்பட்டுள்ளது.
💻வல்வெட்டித்துறை நகர சபை பொது நூலகத்தில் நிறுவப்பட்ட டிஜிட்டல் அறிவு மையமானது 28.02.2024 அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.