வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு உள்ளூராட்சி சபைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட உத்தியோகத்தர்களிற்கான (ஆண்கள்) கயிறிழுத்தல் இறுதிப் போட்டியில் வல்வெட்டித்துறை நகரசபை உத்தியோகத்தர்கள் (ஆண்கள்) அணி சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது . இப்போட்டி தரையில் அல்லாமல் விசேடமாகக் கடலுக்குள் வித்தியாசமான முறையில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















