மதிப்பிக்குரிய செயலாளர் தர்சினி நிதர்சன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு சபையில் நடைபெற்றது.

 

வடக்கு மாகாணமதில் - நம் வல்வெட்டித்துறை நகரசபை தனித்துவமாய் முத்திரை பதித்திட திறம்பட 02.03.2021 தொடக்கம் 2024.04.01 வரை சேவையாற்றி இன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றலாகிச் செல்லும் எங்கள் மதிப்பிக்குரிய செயலாளர் திருமதி தர்சினி நிதர்சன் அவர்களை கௌரவித்து பிரியாவிடை வழங்கிய நிகழ்வின் சில பதிவுகள்.

 

வடக்கு மாகாணமதில் - நம் வல்வெட்டித்துறை நகரசபை தனித்துவமாய் முத்திரை பதித்திட திறம்பட 02.03.2021 தொடக்கம் 2024.04.01 வரை சேவையாற்றி இன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றலாகிச் செல்லும் எங்கள் மதிப்பிக்குரிய செயலாளர் திருமதி தர்சினி நிதர்சன் அவர்களை கௌரவித்து பிரியாவிடை வழங்கிய நிகழ்வின் சில பதிவுகள்.

பிரிவுபசார விழாவுமஂ வருட இறுதி ஒனஂறுகூடலஂ 2023

 

ஊழியரஂ நலனஂபுரிசஂசஙஂகதஂதினஂ ஏறஂபாடஂடிலஂ நடாதஂதபஂபடஂட 2023 ஆணஂடிறஂகான பிரிவுபசார விழாவுமஂ வருட இறுதி ஒனஂறுகூடலஂ நிகழஂவினஂ பதிவுகளஂ சில

 

பூச்சிய கழிவு தின செயற்றிட்டம்

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட வல்வை றோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலை மாணவர்களிற்கு முறையான திண்மக் கழிவகற்றல் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்டது.
♻️இதன்போது முறையற்ற திண்மக்கழிவகற்றல் செயற்றிட்டத்தினால் ஏற்படும் சுகாதார விளைவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
♻️அத்துடன் வேறுபட்ட திண்மக்கழிவுகளுக்கான நிறக்குறியீடுகளை பயன்படுத்தி தரம்பிரித்து கழிவுகளை அகற்றுதலும் அதனுடன் தொடர்புடைய 3R (Reduce- குறைத்தல், Reuse - மறுபயன்பாடு, Recycle - மறுசுழற்சி) பொறிமுறையை அமுல்படுத்தலும் இதனுடைய பிரதான நோக்கம் ஆகும்.

 

முன்பள்ளிகளிற்கு வர்ணக்கழிவுக் கூடைகள் விநியோகம்

 

சிறுவர்களிடத்தே கழிவு முகாமைத்துவ எண்ணக்கருவை புகுத்து முகமாக நகராட்சி மன்ற நிர்வாக எல்லைக்குட்பட்ட முன்பள்ளிகளிற்கு சிறிய வர்ணக்கழிவுக் கூடைகள் வழங்கப்பட்டது.

♻️ சிறார்களின் மனங்களில் ஊன்றப்படும் சிறிய எண்ணக்கரு நாளைய வல்வையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் சபை நிதியில் இவை வழங்கப்பட்டன.

டிஜிட்டல் அறிவு மையம் (Digital knowledge Centre) உருவாக்கம்

டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுதல்’ என்ற கருப்பொருளில் ஆசிய மன்றத்தின் (Asia Foundation) நிதியுதவியுடன் ஆளுகைக்கான புத்தாக்க மையத்தால் (CGI) அமுலாக்கப்படும் ‘டிஜிட்டல் அறிவு மையங்களை வலுப்படுத்தும்’ செயற்திட்டத்தின் கீழ் வல்வெட்டித்துறை நகர சபை பொது நூலகத்தில் டிஜிட்டல் அறிவு மையம் (Digital knowledge Centre) நிறுவப்பட்டுள்ளது.
💻வல்வெட்டித்துறை நகர சபை பொது நூலகத்தில் நிறுவப்பட்ட டிஜிட்டல் அறிவு மையமானது 28.02.2024 அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.