வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட வல்வை றோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலை மாணவர்களிற்கு முறையான திண்மக் கழிவகற்றல் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது முறையற்ற திண்மக்கழிவகற்றல் செயற்றிட்டத்தினால் ஏற்படும் சுகாதார விளைவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் வேறுபட்ட திண்மக்கழிவுகளுக்கான நிறக்குறியீடுகளை பயன்படுத்தி தரம்பிரித்து கழிவுகளை அகற்றுதலும் அதனுடன் தொடர்புடைய 3R (Reduce- குறைத்தல், Reuse - மறுபயன்பாடு, Recycle - மறுசுழற்சி) பொறிமுறையை அமுல்படுத்தலும் இதனுடைய பிரதான நோக்கம் ஆகும்.