ஆதன உரிமைமாற்றம்
ஒரு குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்ற எல்லைக்குள் உள்ள அனைத்து நிலம் மற்றும் கட்டிடங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் உள்ளூராட்சி மன்றத்தில் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். நிலம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் உள்ளூராட்சி மன்றத்தில் பதிவு செய்யப்படுவதும் கட்டாயமாகும். பின்வரும் காரணங்களுக்காக நிலம் மற்றும் ஆதனத்தின் உரிமையைப் பதிவு செய்வது முக்கியம்;
1. ஆதன வரியின் நோக்கத்திற்காக உள்ளூராட்சிமன்றம் தனது பகுதிக்குள் உள்ள
சொத்து பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கு.
2. பதிவு இல்லாத பட்சத்தில் நிலத்தின் உபபிரிவிடல் மற்றும் நில அபிவிருத்திக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது.
3. பதிவு இல்லாத நிலையில் கட்டிட அனுமதி வழங்கப்படமாட்டாது
.