திண்மக்கழிவகற்றல் சேவை
உள்ளுராட்சி மன்றங்களினால் வரிப்பணம் அறவிடப்படுகின்ற பிரதேசத்திற்குள் அமைந்துள்ள வீடுகளிலுள்ள சமையல் கழிவுகள் மற்றும் வீதிகளில் உள்ள கழிவுகளை சேகரித்து அகற்றுதல் அந்த உள்ளுராட்சி நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இவற்றை உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள் என வகைப்படுத்தி சேகரித்து உரிய வகையில் முகாமைத்துவம்செய்யவேண்டிய பொறுப்பு நகரசபைக்கு உரியது ஆகும்
திண்மக்கழிவகற்றல் தொடர்பான வாராந்த அட்டவணையை பார்ப்பதற்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
சபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் திண்மக்கழிவகற்றல் களஞ்சிய அறையில் சேகரிக்கப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்படுகிறது. பிளாஸடரிக் போத்தல்கள் பிளாஸ்ரிக் உடைக்கும் இயந்திரத்தின் மூலம் நொருக்கப்பட்டு மீள்சுழற்சி செய்யப்படும் நிறுவனங்களிற்கு விற்பனை செய்யப்படும்.