சபை வரலாறு
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பிரதேசத்தில் கடற்கரையோரமாக அமையப்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் பட்டின சபையாக இருந்து வந்த இது,14,906/4ஆம் இலக்க 1970.05.19ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் 1971.01.01.ஆம் திகதி முதல் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றமாக தரமுயர்த்தப்பட்டு தமது ஆளுகைக்குட்பட்ட மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கிவருகின்றது. எமது பிரதேசமானது கிழக்கே பொலிகண்டி தொடக்கம் மேற்கே தொண்டமர்னாறு வரை உள்ள கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்நகராட்சி மன்றமானது யாழ் நகரிலிருந்து 29கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி 09 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனுடைய பரப்பளவு 5.36 சதுரகிலோமீற்றராக இருப்பதோடு இங்கு வசிக்கும் மொத்த சனத்தொகை 9228 ஆகும். மேலும் இந்நகரசபையில் 282 வர்த்தக நிலையங்களும் 7541 ஆதனவரி அலகுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1928/26ஆம் இலக்க 21.08.2015 ஆம் திகதிய இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமான பத்திரிகையில் திருத்தப்பட்ட 2006/44 இலக்க 17.02.2017ஆம் திகதிய இலங்கை சனநாயக சோசலிச குடியரசின்அதிவிசேட வர்த்தமான பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.