சபையின் செயற்பாடுகள்
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம், அரசாங்க கொள்கைகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய சேவை வழிகாட்டிகளுக்கமையவும் நகர சபை கட்டளைச்சட்டம் அத்தியாயம் 255 மற்றும் தொடர்புடைய சட்ட விதிமுறைகளுக்கமையவும் பொது நிர்வாகம், சுகாதார சேவைகள், பௌதீகத்திட்டமிடல், நீர்சேவை, பொதுப்பயன்பாட்டுச்சேவை, நலன்புரிச்சேவைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக வருடாந்த வரவு செலவுத்திட்டத்தை தயாரித்து தேவையான செயற்திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அதனடிப்படையில் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி இப்பிரதேச மக்களிற்கு பல்வேறு சேவைகளை சிறப்புடன் ஆற்றி வருகின்றது.